இந்தியா

சுதந்திர நாள்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டது கூகுள்!

15th Aug 2022 11:14 AM

ADVERTISEMENT

நாட்டின் சுதந்திர நாளையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள்.  

பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், சிறப்பு நாள்களில் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு சிறப்பித்து வருகிறது. 

அந்தவகையில் இன்று நாட்டின் சுதந்திர நாளையொட்டி,  சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள். 

கேரளத்தைச் சேர்ந்த நீதி என்பவர் இதனை வடிவமைத்துள்ளார். இந்தியாவின் கலாசாரத்தை சித்தரிக்கும் வகையிலும் அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து கொண்டாடுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் வெளிப்பாடாக கவன ஈர்ப்புச் சித்திரத்தில் பட்டம் இடம்பெற்றுள்ளது. 

ADVERTISEMENT

நாட்டின் சுதந்திர நாள் இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதையும் படிக்க | இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும்: பிரதமர் மோடி

ADVERTISEMENT
ADVERTISEMENT