இந்தியா

ராஜஸ்தான்: துப்பாக்கி முனையில் பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்கு மிரட்டல்

15th Aug 2022 12:49 PM

ADVERTISEMENT

ராஜஸ்தானில் துப்பாக்கி முனையில் பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், முன்னாள் பாஜக எம்எல்ஏ அம்ரிதா மேக்வால். இவர் ஞாயிறு இரவு அஜ்மீரிலிருந்து ஜலோருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். நரேலி புழியா அருகே கார் வந்துகொண்டிருந்தபோது அதனை நிறுத்திய மர்ம நபர்கள் அம்ரிதாவை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர். 

இதையும் படிக்க- கடலில் தேசியக் கொடியேற்றி கொண்டாடிய மீனவர்கள்

அத்துடன் காரின் கண்ணாடியையும் அவர்கள் அடித்து உடைத்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதுகுறித்து ஆழ்வார் கேட் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

தப்பியோடிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். பாஜக முன்னாள் எம்எல்ஏவை துப்பாக்கி முனையில் மர்ம நபர்கள் மிரட்டிய சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT