இந்தியா

மூக்கு வழி செலுத்தும் கரோனா மருந்துக்கு அனுமதி கோரிய பாரத் பயோடெக் நிறுவனம்!

15th Aug 2022 03:35 PM

ADVERTISEMENT

மூக்கு வழி செலுத்தும் கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி கோரி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. 

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவேக்ஸின் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்து வருகிறது. 

இந்நிலையில் மூக்குத் துவாரம் வழியே செலுத்தப்படும் கரோனா மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில் அதுகுறித்த சோதனை நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், சோதனை செய்த தரவுகளை சமர்ப்பித்து 'பிபிவி154' என்ற மூக்கு வழி செலுத்தக்கூடிய கரோனா மருந்தினை பயன்பாட்டுக்கு கொண்டுவர அனுமதி கோரி பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது. 

ADVERTISEMENT

சோதனைகளில் இது பாதுகாப்பானது என்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. 

மேலும், ஒமைக்ரான் மற்றும் அதற்கு முந்தைய கரோனா வைரஸ்களுக்கு இது எதிர்வினை ஆற்றுகிறது. தொற்று பாதிப்பையும் பரவுதலையும் குறைகிறது என்றும் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க | உயர்நீதிமன்றங்களுக்கு மேலும் 37 புதிய நீதிபதிகள் நியமனம்

ADVERTISEMENT
ADVERTISEMENT