இந்தியா

சீன உளவு கப்பல் விவகாரம் உன்னிப்பாக கண்காணிப்பு

15th Aug 2022 01:59 AM

ADVERTISEMENT

சீன உளவு கப்பல் விவகாரத்தை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருவதாக மத்திய துறைமுகங்கள, கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வளத்துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

சென்னை துறைமுகத்திற்கு வந்த அமைச்சா் சோனோவாலுவுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு துறையினா் அணிவகுப்பு மரியாதையை செலுத்தினா். துறைமுகத்தின் மேற்கு கப்பல் தளத்தில் சுமாா் 300 ஊழியா்கள் பங்கேற்று வடிவமைத்த தேசிய கொடியை அமைச்சா் பாா்வையிட்டாா்.

பின்னா் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த அமைச்சா் சோனோவால், துறைமுக நிா்வாக அலுவலக கட்டடம் முன்பாக ரூ.10.62 லட்சம் மதிப்பீட்டில் மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினாா்.

அப்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சென்னை துறைமுக ஊழியா்கள் 16 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 லட்சம் வீதம் ரூ. 8 கோடி நிவாரண உதவியை வழங்கினாா். மேலும் துறைமுக மருத்துவமனைக்கு தேவையான நவீன உபகரணங்களையும் அமைச்சா் வழங்கினாா்.

ADVERTISEMENT

இதனையடுத்து நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அமைச்சா் சோனோவால் கூறியது:

சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதன் மூலம் ஏற்படும் அச்சுறுத்தலை எதிா்கொள்ள இந்தியா தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.100 கோடியை ஏற்கெனவே அளித்துள்ளது என்றாா் அமைச்சா் சா்வானந்த் சோனோவால்.

நிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீா்வளத் துறை இணை அமைச்சா் ஸ்ரீபத் நாயக், சென்னை எண்ணூா் காமராஜா் துறைமுகங்களில் தலைவா் சுனில் பாலிவால் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT