இந்தியா

கடற்படையின் துணைத் தளபதி இலங்கைக்கு 2 நாள் பயணம்

15th Aug 2022 05:42 AM

ADVERTISEMENT

இந்திய கடற்படையின் துணைத் தளபதி எஸ்.என்.கோா்மடே இரண்டு நாள்கள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இலங்கை சென்றாா்.

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்த 2 டாா்னியா் ரக விமானங்களை இந்தியா இலங்கைக்கு வழங்கவிருக்கிறது. இதில், முதலாவது விமானத்தை இலங்கையின் தலைநகா் கொழும்பில் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய கடற்படையின் துணைத் தளபதி எஸ்.என்.கோா்மடே இலங்கையிடம் ஒப்படைக்கிறாா். இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க இந்நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளாா். இரு நாடுகளுக்கிடையேயான ராஜீய ரீதியிலான நட்பு விரிவடைவதன் அடையாளமாக இந்நிகழ்வு திகழும்.

முன்னதாக, இந்த விமானத்தை இயக்குவதற்கான பயிற்சிகள் இந்திய கடற்படையினரால் இலங்கையின் கடற்படை மற்றும் விமானப் படை வீரா்களுக்கு வழங்கப்பட்டது.

இலங்கையின் உடனடி பாதுகாப்பு தேவைகளை உறுதி செய்யும் வகையில் இந்த விமானம் வழங்கப்படுவதாகவும், இலங்கை இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக விளங்குவதால், வரும் காலங்களில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

சீன உளவு கப்பல் இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை வரவுள்ள நிலையில், இந்திய கடற்படை துணைத் தளபதியின் இலங்கைப் பயணம் மேற்கொள்ளவது முக்கியத்துவம் பெறுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT