இந்தியா

உத்தரப் பிரதேசம்: கன்னத்தில் அறைந்த பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற நபர்

14th Aug 2022 04:47 PM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தில் கன்னத்தில் அறைந்த பெண்னை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு காவல் துறையில் ஒருவர் சரணடைந்துள்ளார்.

இது குறித்து காவல் துறை கண்காணிப்பாளர் ராஜ் கரண் கூறியதாவது: “ இளம் பெண்ணை கத்தியால் குத்திய அந்த நபர் உத்தரப் பிரதேசத்தின் கோட்வாலி பகுதியைச் சேர்ந்தவர். கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் அர்மானா ( வயது 27) ஆகும். அந்த நபர் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு கூர்மையான ஆயுதத்துடன் சென்றுள்ளார். வீட்டினுள் நுழைந்த அவர் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் அந்த பெண்ணை குத்திக் கொன்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ரூ.43 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

மேலும், அந்தப் பெண்ணின் அத்தை நிஷா (56 வயது) மற்றும் மாமா குர்பான் ஷா ( 60 வயது) அவர்களையும் தாக்கியுள்ளார். அவர்கள் தற்போது வாராணசியில் உள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பின் அந்த நபர் காவல் துறையில் சரணடைந்துள்ளார். அந்த பெண்ணின் உடல் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.” என்றார்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து காவல் துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT