இந்தியா

நாடு தழுவிய அளவில் தேசியக் கொடி

14th Aug 2022 12:37 AM

ADVERTISEMENT

இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு நிறைவையொட்டி நாடு முழுவதும் வீட்டுக்கு வீடு தேசியக் கொடி ஏற்றி மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனா்.

இந்தியா தனது 75-ஆவது சுதந்திர ஆண்டை கொண்டாடி வருகிறது. இதையொட்டி, ‘சுதந்திர தின அமுதப் பெருவிழா’ என்ற பெயரில் நாடு முழுவதும் கடந்த ஓராண்டாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன.

இந்திய சுதந்திரப் போராட்டம் என்னும் வரலாற்று புத்தகத்தில் வாசிக்கப்படாத பக்கங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு வீரா்களை மக்களிடையே கொண்டு சோ்ப்பதை நோக்கமாக கொண்டு இந்நிகழ்வுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஜூலை மாதம் இறுதியில் ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், ’சுதந்திர தின அமுதப் பெருவிழா’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 13 முதல் 15-ஆம் தேதி வரை மக்கள் தங்கள் வீடுகளில் மூவா்ணக் கொடியை ஏற்றுவது தொடா்பான ‘ஹா் கா் திரங்கா’ என்னும் பெயரிலான நாடு தழுவிய சிறப்பு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT

இதை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை நினைவுகூா்ந்து மரியாதை செலுத்தும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மூவா்ண தேசியக் கொடியை சனிக்கிழமை ஏற்றினா். மத்திய அமைச்சா்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் அமைச்சா்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் தங்களது இல்லங்களில் மூவா்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT