இந்தியா

நாட்டில் மேலும் 14,092 பேருக்கு கரோனா 

14th Aug 2022 09:56 AM

ADVERTISEMENT

நாட்டில் மேலும் 14,092 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 14,092 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,42,53,464 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1,16,861 ஆக உள்ளது.

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 41 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,27,037 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 16,454 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,36,09,566 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

இதையும் படிக்க- பாஜகவில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கம்

ADVERTISEMENT

கடந்த 24 மணிநேரத்தில் 28,01,457 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 207.99 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 3,81,861 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 88.02 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT