இந்தியா

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஊழலை வளர்க்கிறது: மாநில பாஜக தலைவர்

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் ஊழல் மற்றும் மாஃபியாக்களை வளர்ப்பதாக புதிதாக சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள அருண் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் அதனுடைய மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் மாஃபியாக்கள் மற்றும் ஊழலை மட்டுமே அனைத்து பகுதிகளிலும் வளர்த்துள்ளது என பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார். 

அந்த சந்திப்பில் அவர் பேசியதாவது: “ முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவினை நனவாக்க பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டினை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்கிறது. மத்திய அரசினுடைய நலத் திட்டங்கள் நாட்டினை முன்னேற்றமடைய செய்துள்ளது. ஆனால், கடந்த 2018 ஆம் ஆண்டு மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வளர்ச்சித் திட்டங்கள் தடைபட்டு விட்டன.

காங்கிரஸ் ஊழலில் திளைத்துள்ளது. மாநிலத்தில் ஊழல் மற்றும் மாஃபியாக்கள் காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சத்தீஸ்கரில் இளைஞர்களின் எதிர்காலத்தை காங்கிரஸ் வீணாக்கி வருகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சத்தீஸ்கர் மாநிலத்தில் வறுமை, பசி இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என கனவு கண்டார். அவர் மக்கள் செழிப்பாக இருக்க வேண்டும் என நினைத்தார். ஆனால், தற்போது இருக்கும் அரசோ அதற்கு மாறாக மக்களின் வாழ்க்கையை வீணாக்கி வருகிறது.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT