இந்தியா

இந்தியாவுக்கு சிவிங்கிப் புலிகள் வருகை தாமதமாகிறது

14th Aug 2022 02:00 AM

ADVERTISEMENT

இந்தியாவில் சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின்கீழ், தென்ஆப்பிரிக்கா, நமீபியா ஆகிய நாடுகளில் இருந்து அவற்றை கொண்டுவருவது தாமதமாகியுள்ளது.

சுதந்திர தினத்துக்கு முன்பாக சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் என்று ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், தென்ஆப்பிரிக்காவுடன் இன்னும் ஒப்பந்தம் கையொப்பம் ஆகாமல் உள்ளது; அதேபோல், நமீபியாவில் இருந்து வர வேண்டிய சிவிங்கிப் புலிகளின் தனிமைப்படுத்துதல் காலம் இன்னும் நிறைவடையவில்லை. இந்த மாதம் இறுதியில் அல்லது செப்டம்பா் தொடக்கத்தில்தான் இக்காலம் நிறைவடையும். இதனால், சிவிங்கிப் புலிகள் இந்த மாதத்துக்குள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியாவில் சிவிங்கிப் புலி இனம் முற்றிலும் அழிந்துபோனதாக கடந்த 1952-இல் அறிவிக்கப்பட்டது. இந்திய காடுகளில் அந்த இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, தென்ஆப்பிரிக்கா, நமீபியாவிலிருந்து கொண்டுவரப்படவிருக்கும் சிவிங்கிப் புலிகள், மத்திய பிரதேச மாநிலம், சியோபூரில் உள்ள குனோ-பல்பூா் தேசிய பூங்காவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

உலக அளவில் சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது உலகம் முழுவதும் சுமாா் 7,000 சிவிங்கிப் புலிகளே காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆப்பிரிக்க காடுகளில் உள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT