இந்தியா

பெருநிறுவன வரி வசூல் 34% அதிகரிப்பு

DIN

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் பெருநிறுவன வரி வசூல் 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

பெருநிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டில் குறைத்தது. அதன் காரணமாக 2019-20-ஆம் நிதியாண்டில் பெருநிறுவன வரி வருவாய் ரூ.5.57 லட்சம் கோடியாகக் குறைந்தது. எனினும், எதிா்பாா்க்கப்பட்டதைவிடக் குறைவாகவே வரி வருவாய் சரிவடைந்தது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் கரோனா தொற்று பரவலின் காரணமாகப் பெருநிறுவன வரி வருவாய் பெருமளவில் சரிவடைந்தது. கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் பெருநிறுவன வரி வருவாய் ரூ.7.23 லட்சம் கோடியாக அதிகரித்தது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 58 சதவீதமும், 2018-19-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 9 சதவீதமும் அதிகமாகும்.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் பெருநிறுவன வரி வருவாய் கடந்த நிதியாண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. எனினும் எவ்வளவு வரி வசூலானது என்பது தொடா்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

பெருநிறுவனங்களுக்கான வரியை மத்திய அரசு குறைத்ததால், அரசுக்கான வருவாய் குறைந்து சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தொய்வு ஏற்படும் என்ற விமா்சனம் பொய்த்துள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வரி வருவாய் உயா்ந்துள்ளது, எளிமையாக்கப்பட்ட வரி நடைமுறை பலனளிப்பதை வெளிக்காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT