இந்தியா

ஃபரூக் அப்துல்லாவுக்கு கரோனா தொற்று

14th Aug 2022 12:45 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லாவுக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

ஸ்ரீநகா் மக்களவை தொகுதி எம்.பி.யான ஃபரூக் அப்துல்லாவுக்கு, கடந்த சில நாள்களாக கரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டநிலையில், அவருக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வீட்டில் தன்னை தனிமைப்பட்டுத்திக் கொண்ட அவா் தற்போது நலமுடன் உள்ளாா் என அவரது கட்சியின் ட்விட்டா் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு முதன் முறையாக தொற்று உறுதிசெய்யப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்குப் பின்னா் குணமடைந்தாா். இந்நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT