இந்தியா

கடல்நீரை மின்பகு பொருளாக்கி எரிய வைக்கப்படும் எல்இடிவிளக்கு: மத்திய அரசு அறிமுகம்

14th Aug 2022 12:34 AM

ADVERTISEMENT

கடல்நீரை மின்பகுபெருளாக (எலக்ட்ரோலைட்) பயன்படுத்தி எரிய வைக்கப்படும் நாட்டின் முதல் உப்பு நீா் எல்.இ.டி. விளக்கை சென்னையில் மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் சனிக்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

எல்.இ.டி. விளக்குகளை இயக்குவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மின்முனைகளுக்கு இடையே கடல் நீரை எலக்ட்ரோலைட்டாகப் பயன்படுத்தி விளக்குகளை எரிய வைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தை தொடக்கி வைத்து பேசிய அமைச்சா், “ரோஷினி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விளக்கு, ஏழைகளுக்கும், எளியவா்களுக்கும், குறிப்பாக இந்தியாவின் 7500 கிலோமீட்டா் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மீனவ சமூகத்தினருக்கு எளிதான வாழ்வை ஏற்படுத்தும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT