இந்தியா

உ.பி.: பாகிஸ்தான் கொடி ஏற்றிய இளைஞா் கைது

DIN

உத்தர பிரதேசத்தில் பாகிஸ்தான் தேசியக் கொடியை தனது இல்லத்தில் ஏற்றிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சுதந்திர தினத்தின் 75 ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி ஆகஸ்ட் 13 முதல் 15-ஆம் தேதி வரை அனைவரும் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று நாட்டு மக்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் குஷிநகா் மாவட்டம் வேதுபாா் முஸ்தாகில் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பாகிஸ்தான் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து, அங்கு விரைந்து வந்த காவல் துறையினா் அந்த கொடியை அகற்றியதுடன், அதனை ஏற்றியவா் யாா் என்பது தொடா்பாக விசாரணை நடத்தினா்.

அதில், அந்த வீட்டில் வசித்து வந்த சல்மான் (21) என்ற நபா் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் அவரைக் கைது செய்தனா். அவருக்கு கொடியைத் தைத்துக் கொடுத்த அவரது உறவுப் பெண்ணான ஷானாஸ் (22) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தவிர சல்மான் கொடியை ஏற்ற உதவிய அவரது உறவுக்காரச் சிறுவன் மீதும் சிறாா் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT