இந்தியா

தெலங்கானாவில் சுதந்திர தினப் பேரணியை துப்பாக்கியால் சுட்டு துவக்கி வைத்த அமைச்சர்

13th Aug 2022 07:23 PM

ADVERTISEMENT

தெலங்கானாவில் சுதந்திர தினப் பேரணியை விளையாட்டுத்துறை அமைச்சர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு துவக்கி வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் சுதந்திர தினப் பேரணிகள் இன்று நடத்தப்பட்டன. பேரணியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் மஹாபூப்நகர் நகரில் நடைபெற்ற சுதந்திர தினப் பேரணியை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் கவுட் துவக்கி வைத்தார். ஆனால் அவர் பேரணியை துவக்கி வைப்பதற்கு முன் அருகிலிருந்த காவலரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கி வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டார்.

இதையும் படிக்க- அயோத்தியில் ராமர் கோயில் 2023ஆம் ஆண்டுக்குள் நிறைவு

ADVERTISEMENT

இந்நிகழ்வு தெலங்கானாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அமைச்சர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுமா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே பேரணியில் சுடப்பட்ட தோட்டாக்கள் உண்மையானவையா அல்லது கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் போலி தோட்டாகளா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT