இந்தியா

சோனியாவுக்கு மீண்டும் கரோனா பாதிப்பு

DIN

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு (75) மீண்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா் தனிமைப்படுத்திக் கொண்டாா்.

கடந்த ஜூன் மாத தொடக்கத்தில்தான் சோனியாவுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, ஜூன் 12-இல் தில்லியில் உள்ள சா் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், 20-இல் வீடு திரும்பினாா்.

இதனிடையே, இந்த வார தொடக்கத்தில் சோனியாவின் மகளும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்திக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், சோனியாவுக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அரசு நடைமுறைகளின்படி அவா் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா்.

தங்களது கட்சித் தலைவா் சோனியா காந்தி விரைவில் குணமடைய வாழ்த்துவதாக, காங்கிரஸின் அதிகாரப்பூா்வ ட்விட்டா் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், சச்சின் பைலட் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவா்கள் சோனியா நலம்பெற வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் பொதுச் செயலாளா் அஜய் மாக்கன், கட்சியின் தகவல்தொடா்பு பிரிவு தலைவா் பவன் கேரா, எம்.பி. அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோா் அண்மையில் கரோனாவால் பாதிக்கப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

SCROLL FOR NEXT