இந்தியா

மகாராஷ்டிர அமைச்சர்களுக்கு விரைவில் இலாகாக்கள் ஒதுக்கப்படும்: பட்னாவிஸ் 

13th Aug 2022 12:43 PM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு விரைவில் இலாகாக்கள் ஒதுக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சனிக்கிழமை தெரிவித்தார். 

பட்னாவிஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

பாஜக மகாராஷ்டிர பிரிவு தலைவராக நியமிக்கப்பட்ட சந்திரசேகர் பவான்குலேவுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

ADVERTISEMENT

புதிய அமைச்சர்களுக்கு விரைவில் இலாகாக்கள் ஒதுக்கப்படும் எனக் கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்தார்.  

முதல்வராகப் பதவியேற்ற 41 நாள்களுக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை விரிவாக்கப்பட்டு, இருகட்சிகளையும் சேர்ந்த தலா 9 அமைச்சர்கள் என 18 பேர் பதவியேற்றனர்.

இதையும் படிக்க: கல்வி, மருத்துவ திட்டங்கள் இலவசம் ஆகாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேலும், கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பயிர் இழப்புக்கான இழப்பீட்டுத் தொகையை,  அரசு விரைவில் வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார். 

ஜூலை மாதத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை இரட்டிப்பாக்க மகாராஷ்டிர அரசு புதன்கிழமை முடிவு செய்துள்ளது.

தற்போதைய தேசிய பேரிடர் நிவாரண நிதி(என்டிஆர்எப் ) விதிமுறைகளின்படி, ஒரு விவசாயி ஹெக்டேர் ஒன்றுக்கு 6,800 ரூபாய் இழப்பீடாகப் பெறுகிறார். இந்தத் தொகையை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளோம் என்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT