இந்தியா

ஹிமாச்சலில் கட்டாய மதமாற்ற தடுப்பு மசோதா நிறைவேற்றம்

13th Aug 2022 08:00 PM

ADVERTISEMENT

கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்ட மசோதா ஹிமாச்சல் சட்டப்பேரவையில் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. 

வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதா மீது சனிக்கிழமை விவாதம் நடைபெற்றது.

இதையும் படிக்க | அழிவுப்பாதையில் அமேசான் காடுகள்:7 சதவிகிதம் அதிகரித்த காடழிப்பு

கட்டாயப்படுத்தி மதமாற்றி குற்றம் செய்பவா்களுக்கு தண்டனை வழங்க இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.

ADVERTISEMENT

அதன்படி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களை 10 ஆண்டுகள் வரை சிறையிலடைக்கும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT