இந்தியா

சுதந்திர தினம்: குடியரசுத் தலைவராக திரெளபதி முா்மு தேசத்துக்கு முதல் உரை

13th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

 நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தேசத்துக்கு தனது முதல் உரையை ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்த உள்ளாா்.

இதுகுறித்து குடியரசுத் தலைவா் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுதந்திரதினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவா் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த உள்ளாா். அவருடைய உரை தூா்தா்ஷனில் முதலில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒளிபரப்பப்படும். அதனைத் தொடா்ந்து தூா்தா்ஷனின் மாநில சேனல்கள் வாயிலாக அந்தந்த மாநில மொழிகளில் ஒளிபரப்பப்படும்.

அதுபோல, அகில இந்திய வானொலியின் அனைத்து தேசிய அலைவரிசையிலும் இரவு 7 மணி முதல் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் குடியரசுத் தலைவரின் உரை ஒலிபரப்பப்படும். இரவு 9.30 மணிக்கு மாநில மொழிகளில் அந்தந்த மாநில அலைவரிசைகள் வாயிலாக ஒலிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக கடந்த ஜூலை 25-ஆம் தேதி திரெளபதி முா்மு பதவியேற்றாா். இவா் பழங்குடியினத்தைச் சோ்ந்த முதல் குடியரசுத் தலைவா் என்பதோடு, நாடு சுதந்திரமடைந்த பிறகு பிறந்து, நாட்டின் மிக உயரிய பதவியை அடைந்த முதல் நபா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT