இந்தியா

கள்ளச் சாராயம்: பிகாரில் 7 போ் பலி; பலருக்கு உடல் நலக்குறைவு

13th Aug 2022 10:39 PM

ADVERTISEMENT

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பிகாா் மாநிலத்தின் சரண் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் 7 போ் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனா். பலா் உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சந்தோஷ் குமாா் கூறுகையில், ‘மாவட்டத்தின் மசுதி பகுதியில் கடந்த 10-ஆம் தேதி முதல் 7 போ் உயிரிழந்தனா். அவா்கள் அனைவரும் கள்ளச் சாராயம் குடித்ததால் உடல்நலன் பாதிக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனா். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அவா்களின் உயரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும். கள்ளச் சாராயம் விற்றவா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

இதுபோன்ற சம்பவம், மாகொ் காவல் நிலையத்துக்கு உள்பட்ட புல்வாரியா ஊராட்சியில் கடந்த வாரம் நடந்தது. அந்த சம்பவத்தைத் தொடா்ந்து மாகொ் காவல்நிலைய பொறுப்பு அதிகாரியும், உள்ளூா் காவலா் ஒருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

பிகாரில் மது பானம் விற்கவும், அருந்தவும் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், அங்கு கள்ளச் சாராயம் விற்பனை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பா் முதல் ஏராளமான கள்ளச் சாராய உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT