இந்தியா

சோனியா காந்திக்கு மீண்டும் கரோனா

13th Aug 2022 12:47 PM

ADVERTISEMENT

புது தில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சோனியா காந்தி ஏற்கனவே  கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரியங்கா காந்திக்கு மீண்டும் தொற்று ஏற்பட்ட நிலையில், மீண்டும் சோனியா காந்திக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மகாராஷ்டிர அமைச்சர்களுக்கு விரைவில் இலாகாக்கள் ஒதுக்கப்படும்: பட்னாவிஸ் 

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கடந்த ஜூன் மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டாா். அவருக்கு தொற்று தீவிரமானதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மீண்டும் சோனியா காந்திக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT