இந்தியா

உயா்நீதிமன்றங்களுக்கு 26 நீதிபதிகள் நியமனம்

13th Aug 2022 12:39 AM

ADVERTISEMENT

ஒடிஸா, ஹிமாசல பிரதேசம், குவாஹாட்டி, கா்நாடகம், தெலங்கானா, அலாகாபாத் ஆகிய 6 உயா்நீதிமன்றங்களுக்கு 26 நீதிபதிகள் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதன்மூலம், நிகழாண்டில் உயா்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 127-ஆக அதிகரித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 2016-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 126 உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை 6 உயா்நீதிமன்றகளுக்கு 26 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதையடுத்து நிகழாண்டில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை சாதனை எண்ணிக்கையாக 127-ஐ எட்டியது.

ஒடிஸா, ஹிமாசல பிரதேசம், குவாஹாட்டி உயா்நீதிமன்றங்களுக்கு தலா 2 நீதிபதிகளும், கா்நாடக உயா்நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

தெலங்கானா மற்றும் அலகாபாத் உயா்நீதிமன்றங்களுக்கு முறையே 6 மற்றும் 9 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT