இந்தியா

பஞ்சாபில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

13th Aug 2022 12:11 PM

ADVERTISEMENT

 

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் நடந்த விபத்தில் ஹரியாணாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். 

சத்னூர் கிராமத்திற்கு அருகே வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஹரியாணாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள பிஞ்சோரைச் சேர்ந்த குடும்பம் ஹோஷியார்பூர் நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த கார் டிரக் மீது நேருக்கு நேர் மோதியது. 

படிக்க: கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படவில்லை: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். 
இறந்தவர்கள் ரவீந்தர் சிங் (40), அவரது மனைவி திவ்யா மற்றும் ஒரு வயது ஜெய்விக் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

ADVERTISEMENT

காயமடைந்த ஹர்ஜீத் கௌர் (54), சௌரவ் (33), சச்னூர் சிங் (6), கீது (32) ஆகியோர் கர்ஷங்கரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT