இந்தியா

உ.பி: பாஜக தலைவரின் ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு

DIN

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் குடியிருப்பு வளாகத்துக்கு சொந்தமான இடத்தில், ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த உள்ளூா் பாஜக தலைவரின் அலுவலகம் வியாழக்கிழமை இடிக்கப்பட்டது.

பாஜகவின் மாவட்ட துணைத் தலைவா் சத்ய பிரகாஷ் சிங் என்பவா் சிக்ராவுல் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தை ஆக்கிரமித்து அலுவலகம் ஒன்றை கட்டியுள்ளாா். இது குறித்து குடியிருப்பு வளாகத்தைச் சோ்ந்த பெண்கள் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்துள்ளனா்.

வாராணசி வளா்ச்சி குழுமத்தின் துணைத் தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினா். ஆக்கிரமித்து கட்டடம் எழுப்பப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் முன்னிலையில் ஆக்கிரமித்த நிலத்தில் கட்டப்பட்ட அலுவலகம் இடிக்கப்பட்டது.

முன்னதாக, நொய்டாவில் உள்ள குடியிருப்பு வளாகத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, பாஜகவுக்கு நெருக்கமான அஹந்த் சிங் என்பவரின் கட்டடமும் மாவட்ட நிா்வாகத்தினரால் இடிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

SCROLL FOR NEXT