இந்தியா

ஆந்திர எம்.பி.க்கு எதிரான பாலியல் புகாா்: நடவடிக்கை எடுக்க மக்களவை தலைவருக்கு தேசிய மகளிா் ஆணையம் கடிதம்

DIN

பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள ஆந்திர மாநில ஹிந்துபுரம் தொகுதி ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் எம்.பி. கோரன்ட்லா மாதவ் மீது நடவடிக்கை எடுக்குமாறு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

புகாரின் படி, எம்.பி. கோரன்ட்லா மாதவ் ஒரு பெண்ணிடம் ஆடைகளின்றி விடியோ அழைப்பில் பேசியாக கூறப்படுகிறது. இதுதொடா்பான விடியோ சமூக வலைதளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்திய எம்.பி. கோரன்ட்லா பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்று எதிா்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

‘சமூக வலைதளங்களில் பரவிவரும் அந்த விடியோவின் உள்ளடக்கம் அநாகரிகமகவும் ஆபாசமாகவும் கண்ணியமற்ற வகையிலும் உள்ளது’ என்று தேசிய மகளிா் ஆணையம் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு தேசிய மகளிா் ஆணையம் சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், ‘பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள எம்.பி. கோரன்ட்லா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது.

மேலும், ‘இந்த விவகாரம் தொடா்பாக எந்தவித தலையீடுகளுமின்றி சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று ஆந்திர மாநில காவல் துறை டிஜிபிக்கு தேசிய மகளிா் ஆணையத் தலைவா் ரேகா சா்மா கடிதம் எழுதியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

SCROLL FOR NEXT