இந்தியா

காமன்வெல்த்: பதக்கம் வென்ற ஆயுதப்படை வீரர்களுடன் ராஜ்நாத் சிங் கலந்துரையாடல்

12th Aug 2022 04:22 PM

ADVERTISEMENT

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற ஆயுதப்படை வீரர்களுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கலந்துரையாடினார்.

கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் இம்மாதம் 8ஆம் தேதிவரை நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட முப்படைகளையும் சேர்ந்த 31 பேரில் 15 வீரர்கள் பதக்கங்களை வென்றனர். இந்த நிலையில் பதக்கங்களை வென்ற ஆயுதப்படையைச் சேர்ந்த வீரர்களுடன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதுதில்லியில் இன்று கலந்துரையாடினார். 

இதையும் படிக்க- அமர்நாத் யாத்திரையின் நிறைவு பூஜையை செய்தார் காஷ்மீர் துணைநிலை ஆளுநர்

நைப் சுபேதார் ஜெரிமி லால்ரின்னுங்கா, ஹவில்தார் அச்சிண்டா ஷெயூலி, சுபேதார் அமித், சுபேதார் தீபக் புனியா, நவீன், எல்தோஸ்பால் ஆகிய தங்கப்பதக்கம் வென்றவர்கள் மற்றும் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பதக்கம் வென்றவர்களை பாராட்டிய ராஜ்நாத்சிங் வருங்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார். 

ADVERTISEMENT

விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் வி ஆர் சௌத்ரி, கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரிக்குமார், பாதுகாப்புத்துறை செயலர் டாக்டர் அஜ்யகுமார், ராணுவத் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பிஎஸ் ராஜூ உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT