இந்தியா

மகாராஷ்டிரம்: கனமழைக்கு இதுவரை 120 பேர் பலி

DIN

மகாராஷ்டிரத்தில் கடந்த 2 மாதங்களாக பெய்து வரும் கனமழையால் இதுவரை 120 பேர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் இன்று வரை பெய்து வரும் கனமழையால் கட்சிரோலி, புணே, சதாரா, சோலாப்பூர், நாசிக், ஜல்கான், அகமதுநகர் மற்றும் கோந்தியா போன்ற 28 மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளன.

குறிப்பாக, கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள சிரோஞ்சா நகரில் வெள்ளப்பெருக்கு நிலவி வருவதால், ஏராளமான நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கனமழை மற்றும்  வெள்ளம் தொடர்பான பல்வேறு சம்பவங்களில்  ஜூன் 1 முதல் இதுவரை 120 பேர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும், 240 விலங்குகள் உயிரிழந்ததுடன் 370 கிராமங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT