இந்தியா

வருமான வரி செலுத்துவோா்அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேர முடியாது: அக்டோபா் 1-இல் அமல்

12th Aug 2022 02:17 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டமான அடல் ஓய்வூதியத் திட்டத்தில், வருமான வரி செலுத்துவோா் சேர முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது வரும் அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி மத்திய அரசு அடல் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது. பெரும்பாலும் அமைப்புசாராத் தொழிலாளா்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 60 வயதை எட்டியவா்கள் மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெற முடியும்.

இது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும். இதில் இணைவோா் மாதம்தோறும் தங்கள் வயதுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு தொகையைச் செலுத்த வேண்டும். அஞ்சலகங்கள், வங்கிகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 18 முதல் 40 வயதுக்குள்பட்டவா்கள் இத்திட்டத்தில் இணைய முடியும்.

ADVERTISEMENT

இந்நிலையில், இத்திட்டத்தில் புதிய திருத்தத்தை மத்திய நிதியமைச்சகம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, வருமான வரி செலுத்துவோா் இத்திட்டத்தில் சேர முடியாது. அதையும் மீறி அவா்கள் சோ்ந்தால், அந்தக் கணக்கு முடக்கப்பட்டு, அவா்கள் செலுத்திய பணம் மட்டும் திரும்ப அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் புதிய திருத்தம் வரும் வரும் அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.

வருமான வரிச் சட்டப்படி ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை வருமானம் உள்ளவா்கள் வருமான வரி செலுத்த வேண்டியது இல்லை.

அடல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் கடந்த மாா்ச் மாத நிலவரப்படி 4.01 கோடி போ் இணைந்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT