இந்தியா

செங்கோட்டையில் காற்றாடி பிடிப்பவர்களை நியமித்திருக்கும் காவல்துறை

DIN

புது தில்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கோட்டைப் பகுதியில் வான்வழிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காற்றாடி பிடிப்பவர், காற்றாடி பறக்கவிடுபவர், ஜன்னல்வழியாக கண்காணிப்பாளர்களை தில்லி காவல்துறை நியமித்துள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவின்போது செங்கோட்டைப் பகுதியில் காற்றாடி பறப்பதைத்தடுக்கவும், பலூன்கள் பறக்கவிடுதல், டிரோன்களை பறக்கவிடுதல் போன்ற ஆள்களின் துணையுடன் அல்லது துணையில்லாமல் வானத்தில் எந்த விதமான பொருள்களும் பறப்பதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இதற்காக, காற்றாடி பறக்கவிடுபவர்கள், காற்றாடி பிடிப்பவர்கள், ஜன்னல் வழியாக கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வானில் எந்த விதமான பொருள் பறந்தாலும் தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மாஞ்சா நூல்கள் விற்பனை மற்றும் கண்ணாடி தூள் சேர்க்கப்பட்ட நூல்கள் விற்பனையும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT