இந்தியா

உ.பி. படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் 

12th Aug 2022 12:28 PM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேசத்தின் பண்டாவில் ஏற்பட்ட படகு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி மற்றும் நிவாரணம் வழங்கவும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

படிக்க: அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை

ADVERTISEMENT

யமுனை ஆற்றில் பரேபூரிலிருந்து மார்கா கிராமத்திலிருந்து நேற்று 30 முதல் 40 பேரை ஏற்றிச் சென்ற படகு பண்டா மாவட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எப்) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்டிஆர்எப்) குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, கடந்த 18 மணி நேரமாகக் காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, சுமார் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் 17 பேர் காணவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

படிக்க: குஜராத்: காங். எம்எல்ஏவின் மருமகன் ஏற்படுத்திய விபத்தால் 6 பேர் பலி

இச்சம்பவத்திற்குப் பிறகு, முதல்வர் ஆதித்யநாத் உயிர்ச் சேதத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், உடனடியாக தேடுதல் மற்றும் மீட்புப் பணியை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்டப் பொறுப்பான காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டிஐஜி) ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT