இந்தியா

சுதந்திர தினம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் மிக முக்கிய அறிவுறுத்தல்

DIN

புது தில்லி: நாட்டில் கரோனா தொற்று பரவலானது நாள்தோறும் புதிதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், சுதந்திர தினத்தன்று அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

மேலும், சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்போர் அனைவரும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்யித உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் இந்த அறிவுறுத்தல் செய்தியில், அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும், இந்த நாளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக, சுதந்திர தினத்தன்று, மிகப்பெரிய அளவில் மக்கள் ஒரே இடத்தில் கூடும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT