இந்தியா

ஒடிசாவில் அதானி ரூ.41,000 கோடி முதலீடு

12th Aug 2022 04:26 PM

ADVERTISEMENT

 

ஒடிசா மாநிலத்தில் ரூ.41,000 கோடியை அதானி முதலீடு செய்ய உள்ளார்.

அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 4 -வது இடத்தில் இருப்பவர்.

இந்நிலையில், அதானி தன் குழுமத்தை விரிவாக்கும் பொருட்டு புதிதாக பல தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற 5ஜி ஏலத்தில் அதானி நெட்வோர்க் என்கிற புதிய நிறுவனம் பங்குபெற்றது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: இது எதிர்பார்த்தது தான்: மே.இ. தீவுகள் பயிற்சியாளரின் குற்றச்சாட்டுக்கு ரஸ்ஸல் பதில்

தற்போது, அதானி  ஒடிசா மாநிலத்தின் ராயகடா பகுதியில் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்காக அம்மாநில அரசிடம் உரிமம் பெற்றதுடன் ரூ.41,000 கோடியை அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளார்.

ஆண்டிற்கு 4 டன் அளவிற்கு இந்த சுத்திகரிப்பு ஆலையத்தின் திறன் இருக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

மேலும், இந்த நிறுவனத்தின் மூலம் 9,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT