இந்தியா

தில்லியில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்: மீறுவோருக்கு ரூ.500 அபராதம்

11th Aug 2022 05:00 PM

ADVERTISEMENT

 

தலைநகரில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளது தில்லி அரசு.

இந்தியாவில் கரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும் கடந்த சில நாள்களாக தலைநகர் தில்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. 

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மக்கள் கடைப்பிடிக்காததை அடுத்து தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) இந்த முடிவை எடுத்துள்ளது. 

ADVERTISEMENT

படிக்க: ஆமிர் கான் - நாக சைதன்யாவின் 'லால் சிங் சத்தா' - படம் எப்படி இருக்கிறது?

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தில்லி அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தனியார் வாகனங்களில் ஒன்றாகப் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆணையை அமல்படுத்துவதைக் கண்காணிக்க வருவாய் மாவட்ட தெற்குப் பகுதியில் மூன்று அமலாக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

படிக்க: சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் கோத்தபய ராஜபட்ச!

தலைநகரில் கடந்த ஒரு வாரமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 2,146 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் கரோனாவுக்கு 32 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 10 நாள்களில் மட்டும் 14 பேர் பலியாகியுள்ளனர். ஆனால் கரோனா பாதிக்கப்படும் பெரும்பாலோர் லேசான அறிகுறிகளே உள்ளன.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 16,299 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 53 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT