இந்தியா

‘நன்றி அண்ணா’: முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துக்கு தேஜஸ்வி யாதவ் நன்றி

11th Aug 2022 12:41 PM

ADVERTISEMENT

துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிவிற்கு தேஜஸ்வி யாதவ் நன்றி தெரிவித்துள்ளார்.

பிகாரில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் நிதீஷ் குமார் ஆட்சிமைத்துள்ளார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுள்ளார். அவருக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | பாஜகவின் அரசியல் கருவியாக செயல்படும் அமலாக்கத்துறை: கேரள முன்னாள் நிதியமைச்சர் குற்றச்சாட்டு

 

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து தேஜஸ்வி யாதவ்விற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சுட்டுரை பதிவை பகிர்ந்துள்ள தேஜஸ்வி யாதவ், “நன்றி அண்ணா. நாம் இணைந்து எதேச்சதிகார அரசுக்கு எதிராக போராடுவோம். அதற்கான பணி இன்று தொடங்கியுள்ளது. நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT