இந்தியா

விரைவில் சென்னை - மும்பை ரயில் பயண நேரம் குறைகிறது

11th Aug 2022 01:11 PM

ADVERTISEMENT

சென்னை: சென்னையிலிருந்து மும்பை அல்லது மும்பையிலிருந்து சென்னை வருவோர் விரைவில் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தங்களது பயண நேரம் குறைவதை பார்க்கலாம்.

அதாவது சென்னை - மும்பை வரை ஒட்டுமொத்தமாக 1,260 கிலோ மீட்டம் தொலைவும் முழுமையாக இரட்டை வழிப்பாதையாக மாற்றப்பட்டுவிட்டது. கடைசியாக, வாஷிம்பே - பிக்வான் பகுதிகளுக்கு இடையேயான வழித்தடம் இரட்டை வழிப்பாதையாக மாற்றும் பணி செவ்வாயன்று நிறைவு பெற்றது.

இதையும் படிக்க | 300 அதிகாரிகள், 120 வாகனம்.. வருமான வரித்துறையின் பிரமாண்ட சோதனை: கிடைத்ததோ வெறும் ரூ.390 கோடி

சென்னை - மும்பை இடையே சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 28 - 30 மணி நேரம் பயண நேரம் இருந்தது. டீசல் எஞ்ஜின் மாற்றப்பட்டு மின்சார எஞ்ஜின் வந்ததும் பயண நேரம் குறைந்தாலும், ஒற்றை வழித்தடத்தால் வெகு நேரம் ரயில்கள் நின்றுச் செல்லும் நிலை இருந்தது.

ADVERTISEMENT

மற்ற ரயில்களை விடவும், இந்த ரயில்கள் 6 முதல் 7 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வந்தன. 2020ஆம் ஆண்டு வரை சென்னை - மும்பை ரயில்களின் வேகம் மணிக்கு 55 கிலோ மீட்டர் ஆகவே இருந்தது. ஆனால் சென்னை - தில்லி, சென்னை - கொல்கத்தா, சென்னை - மங்களூரு ரயில்களின் வேகம் மணிக்கு 60 கிலோ மீட்டர் என்ற அளவில் உள்ளது.

2020ஆம் ஆண்டு ஒற்றை வழித்தடம் மின் மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து பயண நேரம் 23.5 மணி நேரமாக இருந்தது. இந்த நிலையில், இரட்டை வழித்தடமாக மாற்றும் பணி செவ்வாயன்று நிறைவு பெற்றுள்ளது. இதனால், சென்னை - மும்பை இடையே ரயில்கள் எந்த இடைநிறுத்தமும் இல்லாமல் இனி இயக்கப்படும். இதனால், பயண நேரத்தில் இது நிச்சயம்  எதிரொலிக்கும்.

சென்னை - மும்பை இடையே இரட்டை வழித்தடமாக்கும் பணிகள் மிக மெதுவாக நடைபெற்று வந்தது. ஆனால், தனியார் ரயில்கள் இயக்கலாம் என்ற முடிவை ரயில்வே எடுத்தப்பிறகு, துரித கதியில் நடைபெற்றது. 109 வழித்தடங்களில் 152 இணை ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. இவை மணிக்கு 130 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |  'நாய் கூட சாப்பிடாது' தட்டை கையில் ஏந்தியபடி கதறி அழும் காவலர்

ஏற்கனவே, ரயில் தண்டவாளங்களை தெற்கு ரயில்வே பலப்படுத்தியிருப்பதால் சென்னை - ரேணிகுண்டா இடையே ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT