இந்தியா

ரஜௌரி தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலி: உமர் அப்துல்லா இரங்கல்

11th Aug 2022 11:48 AM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீரின் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 3 ராணுவ வீரர்களுக்கு தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா வியாழக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரஜௌரி மாவட்டத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ராணுவ முகாமில் இன்று அதிகாலை புகுந்த பயங்கரவாதிகள் தற்கொலைப் படையினர் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

ADVERTISEMENT

படிக்க: சிவகளை அகழாய்வில் முதல்முறையாக தங்கம் கண்டெடுப்பு!

இதுதொடர்பாக உமர் டிவிட்டரில் வெளியிட்டுட்ட இரங்கல் செய்தியில், 

ரஜோரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மூன்று ராணுவ வீரர்கள் பணியின்போது உயிரிழந்ததைக் கேட்டு மிகவும் வருந்துகிறேன்.

தாக்குதலைக் கண்டிக்கும் அதே வேளையில், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், தாக்குதலில் காயமடைந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ட்வீட் செய்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT