இந்தியா

குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் இன்று பதவியேற்பு

11th Aug 2022 08:37 AM

ADVERTISEMENT

நாட்டின் 14ஆவது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர்(71) இன்னும் சற்றுநேரத்தில் பதவியேற்கவுள்ளார்.

குடியரசு துணைத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் நிறைவடையவிருந்த நிலையில், அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்றது.

இதில் 528 வாக்குகள் பெற்று எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை, பாஜக கூட்டணி வேட்பாளர் ஜகதீப் தன்கா் தோற்கடித்தார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை 11.45 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், ஜகதீப் தன்கருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல்: 3 வீரர்கள் பலி

இந்த பதவியேற்பு நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்கவுள்ள ஜகதீப் தன்கர், மேற்கு வங்க ஆளுநராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT