இந்தியா

பாஜகவின் அரசியல் கருவியாக செயல்படும் அமலாக்கத்துறை: கேரள முன்னாள் நிதியமைச்சர் குற்றச்சாட்டு

11th Aug 2022 12:12 PM

ADVERTISEMENT

அமலாக்கத்துறை மத்திய அரசின் கருவியாக செயல்படுவதாக கேரள முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு கழகத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத்துறை கேரள முன்னாள் நிதியமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தாமஸ் ஐசக்கை நேரில் ஆஜராகக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இதையும் படிக்க | 

ஏற்கெனவே ஒருமுறை அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் தாமஸ் ஐசக் நேரில் ஆஜராகவில்லை. இந்நிலையில் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தாமஸ் ஐசக் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “அமலாக்கத்துறை மத்திய பாஜக அரசின் அரசியல் கருவியாக செயல்பட்டு வருகிறது” எனக் குற்றம்சாட்டினார்.

இதையும் படிக்க | 

மேலும், “அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி பாஜக எதிர்க்கட்சிகளை தனிமைப்படுத்த முயற்சிக்கிறது. அவர்கள் எத்தகைய குற்றவுணர்வுமின்றி இதனை செய்து வருகின்றனர். மாநில அரசின் வருவாய் ஆதாரத்தை அழிக்க பாஜக முயற்சித்து வருகிறது. பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிறுவனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மக்களை நம்ப வைக்க பாஜக இவ்வாறு நடந்துகொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க | 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலின்படி இந்த விவகாரத்தை அணுகி வருவதாகவும், நீதிமன்றம் இதில் உரிய முறையில் தலையிடும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த தாமஸ் ஐசக் காங்கிரஸ் கட்சி அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக தேசிய அளவில் ஒரு நிலைப்பாட்டையும், மாநில அளவில் ஒரு நிலைப்பாட்டையும் எடுத்து வருகிறது எனவும் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT