இந்தியா

குடியரசு துணைத் தலைவர் பதவி கேட்டேனா? பாஜகவுக்கு நிதீஷ் குமார் பதில் 

11th Aug 2022 03:30 PM

ADVERTISEMENT

பாஜக உடனான கூட்டணி முறிவுக்கு பொய்யான காரணங்களை அக்கட்சியினர் தெரிவித்து வருவதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

பிகாரில் பாஜக உடனான கூட்டணியிலிருந்து வெளிவந்த நிதீஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளார். 

நிதீஷ் குமாரின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ள பாஜக அவர் உள்பட தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரை விமர்சித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி குடியரசு துணைத் தலைவர் பதவி வழங்காததாலேயே நிதீஷ் குமார் கூட்டணியிலிருந்து வெளியேறியதாக தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க | ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசத் தேவையில்லை:  கே.எஸ்.அழகிரி பேட்டி

ADVERTISEMENT

 

இந்நிலையில் பாஜகவின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள நிதீஷ் குமார், “பாஜகவினர் தெரிவிப்பது நகைச்சுவையானது. எனக்கு அப்படி ஒரு கோரிக்கை இல்லை. குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் நான் எந்தளவு ஆதரவு தெரிவித்திருந்தேன் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க | 'நாய் கூட சாப்பிடாது' தட்டை கையில் ஏந்தியபடி கதறி அழும் காவலர்

 

மேலும் இதுதொடர்பாக சுஷில் மோடி தெரிவித்த கருத்துகள் பொய்யானவை எனவும் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT