இந்தியா

மாடுகள் கடத்தல் வழக்கு: மம்தாவின் நெருங்கிய உதவியாளர் அனுப்ரதா கைது

11th Aug 2022 01:01 PM

ADVERTISEMENT

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் நெருங்கிய உதவியாளருமான அனுப்ரதா மோண்டலை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

மாடுகள் கடத்தல் வழக்கில், கடந்த மூன்று நாள்களாக விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை இன்று சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையும் படிக்க | 300 அதிகாரிகள், 120 வாகனம்.. வருமான வரித்துறையின் பிரமாண்ட சோதனை: கிடைத்ததோ வெறும் ரூ.390 கோடி

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பிர்பம் மாவட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் பாகுபலி என்று கூறப்படுபவருமான அனுப்ரதா மோண்டல் இல்லாமல் பிம்பம் பகுதியில் அணுவும் அசையாது என்பது தொண்டர்களின் வாக்கு.

ADVERTISEMENT

இவர் ஹைபோக்ஸியா என்ற நோயால் பாதிக்கப்பட்டவர். எப்போதும் ஆக்ஸிஜனுடன்தான் நடமாடுவார்.

இதையும் படிக்க |  'நாய் கூட சாப்பிடாது' தட்டை கையில் ஏந்தியபடி கதறி அழும் காவலர்

பல சர்ச்சைகளுக்கு ஆளான இவர் மீது பல குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. ஏற்கனவே, தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறை குறித்து சிபிஐ அதிகாரிகள் அனுப்பிரதாவிடம் விசாரணை நடத்திய நிலையில் தற்போது மாடுகள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT