இந்தியா

யமுனையில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி

11th Aug 2022 05:56 PM

ADVERTISEMENT

 

யமுனையில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பண்டா பகுதியைச் சேர்ந்த யமுனா நதியில் ஃபெடாபூரிலிருந்து மார்கா கிராமம் வரை 40 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற படகு ஆழமான பகுதியில் திடீரென பழுது காரணமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

எதிர்பாராத இந்த விபத்தால், படகிலிருந்த அனைவரும் நீரில்  விழுந்தனர். இதுகுறித்து உடனடியாக, மீட்புப்படைக்கு தகவல் அளிக்கப்பட்டாலும் அவர்கள் வருவதற்குள் சிலர் பலியாகினர்.

ADVERTISEMENT

அதில், இதுவரை பலியான 4 பேரின் உடல்களும்  11 பேர் பத்திரமாகவும் மீட்கப்பட்டனர்.

மேலும், இந்த விபத்தில் 20 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT