இந்தியா

காதலுக்கு எதிர்ப்பு: காதலருடன் சேர்ந்து 16 வயது மகனைக் கொன்ற தாய்!

10th Aug 2022 12:19 PM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேசத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்ற மகனையே, காதலருடன் சேர்ந்து கொலை செய்துள்ள தாயை போலீசார் புதன்கிழமை கைது செய்தனர். 

தாய் முனேஷ் மற்றும் அவரது காதலர் சதேந்திரா ஆகியோர் திங்கள்கிழமை அதிகாலை தனது 16 வயது மகனான ஆஷிஷைக் கொன்று, அவரது உடலை ஒரு குழாய்க் கிணற்றில் வீசியதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் வினித் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். 

படிக்க: பால்டிக் கடலுக்கு அடியில் பேரழிவை ஏற்படுத்தும் 1 லட்சம் டன் ரசாயன ஆயுதங்கள்

பின்னர் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

இதுகுறித்து விதவையான பெண்ணிடம் விசாரிக்கையில், தொடர்ந்து தங்கள் உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தான். அதனால் மகன் ஆஷிஷை கூட்டாக இணைந்து கொலை செய்தோம் என்று இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

கணவர் இறந்த பிறகு அந்தப் பெண் சதேந்திராவுடன் உறவை வளர்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT