இந்தியா

ரக்ஷா பந்தன்: பெண்களுக்கு 48 மணிநேர இலவச பேருந்துப் பயணம்

10th Aug 2022 04:05 PM

ADVERTISEMENT


ரக்ஷா பந்தனையொட்டி அரசுப் பேருந்துகளில் 48 மணி நேரத்திற்கு பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 

நாடு முழுவதும் நாளை ரக்ஷா பந்தன் கொண்டாடப்படவுள்ளது. ஆண் - பெண் இடையேயான சகோதரத்துவத்தைப் போற்றும்  வகையில், ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் ரக்ஷா பந்தனையொட்டி உத்தரப் பிரதேசத்தில் உள்ள பெண்கள் அனைவரும அரசுப் பேருந்துகளில் 48 மணிநேரத்திற்கு இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஹிந்தியில் சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ஆகஸ்ட் 10ஆம் தேதி 12 மணி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி பின்னிரவு 12 மணி வரை 18 மணி நேரத்திற்கு பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். பெண்களுக்கான இலவச பயணப் பேருந்துகள் அனைத்தும் முன்பக்கத்தில் தேசியக் கொடியுடம் இயக்கப்படும். 

ADVERTISEMENT

மேலும், மாநிலத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT