இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும் உதய் உமேஷ் லலித்

10th Aug 2022 06:35 PM

ADVERTISEMENT

என்.வி.ரமணா ஓய்வு பெற உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 

இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை: நாளைக்கு ஒத்திவைப்பு

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, அடுத்த தலைமை நீதிபதி யாா் என பரிந்துரைத்து அறிவிப்பது வழக்கம்.

ADVERTISEMENT

அதன்படி அடுத்த தலைமை நீதிபதி தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்திற்கு என்.வி.ரமணா எழுதியிருந்த கடித்தத்தில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயரை பரிந்துரை செய்திருந்தார். 

இதையும் படிக்க | ஆளுநரை கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன்? கே. பாலகிருஷ்ணன்

ந்நிலையில் என்.வி.ரமணாவின் இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்பதாக அறிவித்துள்ளது. அதன்படி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு யு.யு.லலித்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதன்மூலம் வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், பின் தலைமை நீதிபதியாகவும் பதவி பெறும் இரண்டாவது நபராக யு.யு.லலித் உள்ளார். 

பிரபல மூத்த வழக்குரைஞராக இருந்து வந்த யு.யு.லலித், கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT