இந்தியா

இலங்கையில் வரலாறு காணாத வகையில் மின் கட்டணம் 246 சதவீதம் உயர்வு!

10th Aug 2022 09:02 AM

ADVERTISEMENT


கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் மின் கட்டணம் 246 சதவீதம் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வு புதன்கிழமை (ஆக.10) முதல் அமலுக்கு வருவதாக இலங்கை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதாரப் பிரச்னை, வேலையின்மை நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் நேரடியாக பாதித்து வருவது பெரும் கவலை அளிக்கிறது. இலங்கையில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூா்த்தி செய்து கொள்ள முடியாத சூழ்நிலையில், தற்போது கடந்த 9 ஆண்டுகளில் வரலாறு காணாத வகையில் முதன் முறையாக மின் கட்டணத்தை  264 சதவீதம் உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது அந்நாட்டு மின்சார வாரியம். 

நஷ்டத்தில் இயங்கும் இலங்கை மின்சார வாரியத்தை லாபமாக்கும் முயற்சியாக மின் கட்டணங்களை 800 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று மின்சார வாரியம் கோரிக்கை வைத்தது. ஆனால், அதை நிராகரித்த அரசு, அதிகபட்சமாக 264 சதவீதத்திற்கு உயர்த்திக் கொள்ள அனுமதித்துள்ளது.

இதையடுத்து புதன்கிழமை (ஆக.10) முதல் 264 சதவீத மின் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த மின் கட்டண உயர்வால் இலங்கையில் வாழும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அதாவது சராசரியாக ஒரு மாதத்திற்கு 90 கிலோ வாட் மின்சாரத்தை பயன்படுத்துபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுவார்கள். இதனால் அவர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் பலமடங்கு உயரும். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | படையெடுப்புக்குத் தயாராகிறது சீனா

அதே வேளையில் மாதாந்திரம் அதிகம் மின்சாரத்தை உபயோகப்படுத்துவர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் 80 சதவீதம் அதிகமாகும். அதாவது இதுவரை யூனிட்டுக்கு ரூ.45 செலுத்தி வந்தவர்கள், இனி ஒரு யூனிட்டுக்கு ரூ.75 செலுத்த வேண்டி வரும்.

மின் வாரியத்தின் இந்த நடவடிக்கையில், தற்போது ஒரு யூனிட் ஒன்றுக்கு ரூ.2.50 ஆக வசூலிக்கப்பட்டு வந்த ஒரு யூனிட் மின்சாரம், இனி ஒரு யூனிட்டுக்கு ரூ.8 வசூலிக்கப்படும்.

30 யூனிட்டுகளுக்குக் கீழே பயன்படுத்துவோருக்கு இனி 264 சதவீதம் மின் கட்டண உயர்வு அமலாகும்.

30 யூனிட் முதல் 60 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர், இனி 211 சதவீத மின் கட்டண உயர்வு அமலாகும். 60 முதல் 90 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 125 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உணவு, எரிபொருள் மற்றும் மருந்து போன்ற மிக அத்தியாவசியமான இறக்குமதிகளுக்கு கூட நிதியளிப்பதற்காக அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து வெளியேறிய பின்னர் அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது இலங்கை. 

ADVERTISEMENT
ADVERTISEMENT