இந்தியா

பிகார் மக்களின் எதிர்பார்ப்பை நிதீஷ்குமார் நிறைவேற்றுவார்: பிரசாந்த் கிஷோர்

10th Aug 2022 01:22 PM

ADVERTISEMENT

 

பிகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிதீஷ்குமார் நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கை தனக்கு இருப்பதாக  தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பிகாரில் பாஜகவுடன் இருந்த கூட்டணியை முறித்துக் கொள்வதாக முடிவெடுத்த நிதீஷ் குமார் நேற்று ஆளுநரை இரண்டு முறை சந்தித்தார். முதல் முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் கீழ் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

ஏழு கட்சிகளைச் சேர்ந்த, 164 எம்எல்ஏக்கள் ஆதரவு தனக்கிருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, இன்று (புதன்கிழமை) ஆட்சியமைக்குமாறு நிதீஷ் குமாரை ஆளுநர் அழைத்துள்ளதால் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் புதிய கூட்டணியின் ஆதரவுடன் பிகார் மாநில முதல்வராக  பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்கிறார் நிதீஷ் குமார்.  

ADVERTISEMENT

இதையும் படிக்க: பிகார் முதல்வராக 8வது முறையாக பதவியேற்கும் நிதீஷ்: அறிய வேண்டிய 10 தகவல்கள்

இந்நிலையில், பிரசாந்த் கிஷோரிடம் நிதீஷ்குமாரின் அரசியல் குறித்து கேள்வியெழுப்பியபோது, ‘பிகாரின் நிலையற்ற அரசியலில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து வருகிறேன்.  கடந்த 2013 - 2014 முதல், தற்போது வரை ஆட்சி மாற்றம்  6 முறை நிகழ்ந்துள்ளது. ஒருவரின் அரசியல் அல்லது  நிர்வாக எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது ஆட்சிமாற்றங்கள் நடக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக இது நடைபெற்று வருகிறது. புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளதாக நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார். மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்றுவார் என்றும் மீண்டும் பிகாரில்  நிலையான அரசு திரும்பும் எனவும் நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT