இந்தியா

காஷ்மீரில் 30 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு பறிமுதல்

10th Aug 2022 10:39 AM

ADVERTISEMENT

 

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 30 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை போலீசார் கைப்பற்றி செயலிழக்கச் செய்துள்ளனர். 

இதையும் படிக்க | காமன்வெல்த் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் பவானி தேவி!

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கிடைத்த  ரகசிய தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் மண்டல போலீசார் இணைந்து தீவிர சோதனை நடத்தினர்.

ADVERTISEMENT

இதில், சர்குலர் சாலையில் தஹாப் கிராசிங் அருகே சுமார் 25 கிலோ முதல் 30 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை போலீசார் கைப்பற்றி அதனை செயலிழக்கச் செய்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT