இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

10th Aug 2022 06:22 PM

ADVERTISEMENT


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.

இன்று அதிகாலை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் புத்காமில் நடந்து வரும் துப்பாக்கிச் சூட்டில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்)/லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) ஆகிய பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் வந்தது. 

இதையடுத்து, புத்காமில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து மறைவிடத்திலிருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார். 

தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT