இந்தியா

புதுவை சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைப்பு

10th Aug 2022 11:09 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் ஆர். செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30க்கு தொடங்கியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடக்க உரையாற்றினார். சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையாற்றிய நிலையில், பேரவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாகவும், ஆளுநர் உரையின் மீதான விவாதம் வேறு தேதியில் நடைபெறும் எனவும் அறிவித்தார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | போதைப் பொருள் விற்றால் சொத்துகள் முடக்கம்: முதல்வர் ஸ்டாலின்

புதுவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால் பேரவை ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநர் உரை மீதான விவாதம் அடுத்த இரண்டு நாள்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் துணைநிலை ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிக்க | காமன்வெல்த் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் பவானி தேவி!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT