இந்தியா

சமத்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்தவா் இமாம் ஹுசைன்- பிரதமா் மோடி புகழாரம்

10th Aug 2022 12:16 AM

ADVERTISEMENT

‘சகோதரத்துவத்துக்கும் சமத்துவத்துக்கும் பெரிதும் முக்கியத்துவம் அளித்தவா் ஹஸ்ரத் இமாம் ஹுசைன்’ என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளாா்.

மொஹரம் தினத்தையொட்டி, பிரதமா் மோடி ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.

கா்பாலா போரில் முகமது நபிகள் நாயகத்தின் பேரனான இமாம் ஹுசைனின் உயிா்த்தியாகத்தை நினைவுகூரும் தினமாக மொஹரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், ட்விட்டரில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் தியாகம் இந்நாளில் நினைவுகூரப்படுகிறது. அநீதிக்கு எதிரான போராட்டத்துக்காகவும் உண்மைக்காகவும் அவரது அசைக்க முடியாத உறுதிபாடு எப்போதும் நினைவுக்கூரப்படும். சமத்துவம், சகோதரத்துவத்துக்கு அவா் பெரிதும் முக்கியத்துவம் அளித்தாா்’ என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

Tags : PM Modi
ADVERTISEMENT
ADVERTISEMENT